நிதித்துறைக்கு புதிய வலைதளம்...துவங்கி வைத்த முதலமைச்சர்...!

நிதித்துறைக்கு புதிய வலைதளம்...துவங்கி வைத்த முதலமைச்சர்...!
Published on
Updated on
1 min read

சென்னை, தலைமைச் செயலகத்தில் நிதித்துறை சார்பில் புதிய வலைதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர், முதற்கட்டமாக 5 நிறுவனங்களுக்கு அனுமதி கடிதங்களை வழங்கினார். மேலும் மாநில பொதுத்துறை நிறுவனங்களுடைய செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், முறைகேடுகளை முற்றிலும் தவிர்ப்பதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய சி. சி.எஃப்.எம்.எஸ் (ccfms) என்ற இணையதள செயல்பாட்டையும் தொடங்கி வைத்தார்.

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதனுடைய வரவுகள் ஆகியவை தொடர்பான வெளிப்படை தன்மையான செயல்பாடுகள் என நிதித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சியில்  நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com