2 மாதங்களுக்கு நீலகிரி சிறப்பு மலை ரயில் இயக்கம்.. எப்போதிலிருந்து தெரியுமா?.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல் என்ன?

நாளை மறுநாள் முதல் 2 மாதங்களுக்கு மேட்டுப்பாளையம்- உதகை சிறப்பு மலை ரயில்  இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

2 மாதங்களுக்கு நீலகிரி சிறப்பு மலை ரயில் இயக்கம்.. எப்போதிலிருந்து தெரியுமா?.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல் என்ன?

மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை காட்சிகளை ரசிப்பதற்காகவே உதகை மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் விரும்புவது வழக்கம்.

இந்த நிலையில் வரும் சனிக்கிழமை முதல் ஜூலை 22- ம் தேதி வரை 2 மாதங்களுக்கு நீலகிரி சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயில் காலை  11.25 மணிக்கு உதகையிலிருந்து புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். மறு மார்க்கத்தில் காலை 9. 10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்டு பிற்பகல் 2.25 க்கு உதகை சென்றடையும்.

சிறப்பு மலை ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு பயணிக்க முதல் வகுப்பிற்கு 600 ரூபாய், 2-ம் வகுப்பு 295 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை முதல் வகுப்புக்கு 445 ரூபாய், இரண்டாம் வகுப்பு 190 ரூபாய்  என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.