அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடக் கூடாது...ஈபிஎஸ் திட்டவட்டம்!

அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடக் கூடாது...ஈபிஎஸ் திட்டவட்டம்!

அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் இணைந்த பல்வேறு கட்சியினர்:

அதிமுகவில் உட்கட்சி பூசலானது பூதாகரமாக வெடித்து கொண்டிருக்கும் நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள், தங்களை  எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். 

இதையும் படிக்க: மீண்டும் ஒரு நேதாஜியா சசி தரூர்!!!கட்சியால் ஓரங்கட்டப்படும் காரணமென்ன!!!

மீண்டும் கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை:

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவுக்கு எதிராக செயல்படுபவர்களையும், அதிமுகவிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களையும் மீண்டும் கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்வதை  அமைச்சர் பொன்முடி கொச்சைப்படுத்தி பேசியது வருந்ததக்கது எனவும் குற்றம் சாட்டினார். 

ஈபிஎஸ் திட்ட வட்டம்:

அப்போது ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இனி ஓ.பி.எஸ் - உடன் இணைந்து செயல்படுவதற்கு 100 சதவீதம் வாய்ப்புகள் இல்லையென திட்டவட்டமாக தெரிவித்தார். அதேபோன்று, பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருப்பதால், அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிட கூடாது எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.