ஒரே வாக்குறுதி...கா்நாடகாவில் யாா் வெற்றி பெற்றாலும் ஒன்றுதான் - சீமான் அதிரடி!

ஒரே வாக்குறுதி...கா்நாடகாவில் யாா் வெற்றி பெற்றாலும் ஒன்றுதான் - சீமான் அதிரடி!

மேகதாதுவில் அணை கட்டுவதாக இரு கட்சிகளும் கூறியிருப்பதால் கா்நாடகாவில் யாா் வெற்றி பெற்றாலும் ஒன்றுதான் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கருத்து தொிவித்துள்ளாா். 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரணையூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தந்தையின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படிக்க : கர்நாடக முதலமைச்சர் யார்? வாய்ப்பு அதிகம் இருப்பது யாருக்கு? சித்தராமையாவா (அ) சிவகுமரா...

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், மேகதாதுவில் அணை கட்டுவதாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் கூறியுள்ளதால், கர்நாடகாவில் யார் வெற்றி பெற்றாலும் ஒன்றுதான் என தொிவித்தாா். தொடர்ந்து பேசிய அவரிடம், கர்நாடகா தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என்றூம், கர்நாடகாவில் இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிந்து வந்த நிலையில், தற்போது கர்நாடக மக்கள் மாற்றத்தை கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.