ஒரே நாடு ஒரே தேர்தல்: அதிகாரப் பூர்வமான தகவல் இல்லை!!

ஒரே நாடு ஒரே தேர்தல்: அதிகாரப் பூர்வமான தகவல் இல்லை!!
Published on
Updated on
1 min read

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை 35 சதவீதம் கூடுதலாக வைத்திருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடங்க உள்ளதாகவும், முதல் வாரம் வாக்களர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு வரவில்லை எனவும் அதிகாரப்பூர்வமாக கொடுக்கும் வழிமுறைகளைத் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பின்பற்ற உள்ளது என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி  தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com