தமிழக பயணிகள் யாரும் சிகிச்சையிலும், உயிரிழக்கவும் இல்லை - அமைச்சர்

தமிழக பயணிகள் யாரும் சிகிச்சையிலும், உயிரிழக்கவும் இல்லை, அங்கு உள்ள அரசு அலுவலர்களுடன் ஆலோசனை செய்தோம். அவர்களும் தமிழர்கள்  பாதிக்கப்படவில்லை.
தமிழக பயணிகள் யாரும் சிகிச்சையிலும், உயிரிழக்கவும் இல்லை - அமைச்சர்
Published on
Updated on
1 min read

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை துரிதமாக ஏற்படுத்திக் கொடுக்க தமிழக அரசு சார்பில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி தலைமையிலான குழு நேற்று சென்னையில் இருந்து ஒடிசா சென்று அங்கு நேரடியான கல ஆய்வில் செய்த பின் சென்னை திரும்பிய அமைச்சர்கள் குழு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 

கோரமண்டல் ரயில் விபத்தில் தமிழர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்ககூடும் என்று வந்த தகவலின் அடிப்படையில் சென்னையில் இருந்து நேற்று சென்றிருந்தோம். ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டுவர்கள், அங்கு சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டோம் என கூறினார். 

அங்கு தமிழக பயணிகள் யாரும் சிகிச்சையிலும், உயிரிழக்கவும் இல்லை, அங்கு உள்ள அரசு அலுவலர்களுடன் ஆலோசனை செய்தோம். அவர்களும் தமிழர்கள்  பாதிக்கப்படவில்லை என்பதை தெரிவித்தனர். அதன் பிறகு முதலமைச்சருடன் காணொலி காட்சி வாயிலாக கலந்தாலோசனை செய்தோம் என்றார். 

தொடர்ந்து பேசியவர், ரயிலில் மொத்தமாக பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த 127 பேரில் 28 பேர் தமிழர்கள் என்கிற விவரம் வெளியானது. அதில் 21 பேர் நலமாக இருப்பதாக கண்டறிந்த பிறகு 8 பேரை மட்டுமே இன்று தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது. அதன் பிறகு தற்போது அருண், கல்பனா, கமல் மீனா ரகுநாதன் கார்த்திக் உள்ளிட்ட 5 பேரை தற்போது தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கிறது ஆனால் அவர்களும் நலமாக இருப்பதாக உடன் இருந்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்துவிட்டு வருமாறு முதலமைச்சர் தெரிவித்திருந்தார். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெளிவு கிடைத்துவிட்டது, அதனால் சென்னை திரும்பி வந்ததாக தெரிவித்தார். மேலும், இந்த விபத்து நடந்திருக்க கூடாது, எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதை கண்டறிந்து ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதனை ஒன்றிய அரசு செய்யும் என நம்புகிறோம். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய காலத்தில் இதுபோன்ற விபத்துகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார். 

ஒடிசா மாநில அரசு சார்பில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினர். தமிழ்நாட்டு மக்கள் குறித்து நாங்கள் கேட்ட விவரங்கள் அனைத்தையும் வழங்கி, சிறப்பாக செயல்பட்டனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தது, உயிரிழந்தவர்களின் உடல்களை காண நேரில் சென்றது  "வேதனையான அனுபவம்" என கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com