"தமிழ்நாட்டை மீட்டெடுக்க பாஜகாவால் மட்டுமே முடியும்" - அண்ணாமலை

தமிழ்நாட்டை மிக மோசமான நிலைக்கு திமுக மாற்றி வைத்துள்ளதாக பாஜக மாநில தலைவா் அண்ணாமலை விமா்சித்துள்ளாா்.

பாஜக மாநில தலைவா் அண்ணாமலை ”என் மண் என் மக்கள்” நடைப்பயணத்தை தஞ்சாவூர் தொகுதியில் மேற்கொண்டாா். கொடிமரத்து மூலையில் தொடங்கிய நடைபயணம் வடக்கு வீதி, மேல வீதி, தெற்கு வீதி வழியாக கீழ வீதி நிக்கல்சன் கூட்டுறவு வங்கி அருகே நிறைவு செய்யப்பட்டது.

தொடா்ந்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் எந்த பகுதிகளிலும் சாலை, பாலம் உள்ளிட்ட எந்த பணிகளும் சரியாக நடைபெறவில்லை எனவும், மிக மோசமான நிலைக்கு தமிழ்நாட்டை திமுக மாற்றி வைத்துள்ளதாவும் விமா்சித்தாா். 

இதையும் படிக்க : மாநிலக்கல்லூரியில் வி.பி.சிங் சிலை...யார் இந்த வி.பி.சிங் ??!!

ஊழல் குற்றச்சாட்டுகளால் கெட்டுவிட்ட தமிழ்நாட்டை மீட்டெடுக்க பாஜகவால் மட்டுமே முடியும் என குறிப்பிட்ட அவா், 400-க்கும் அதிகமான மக்களவை உறுப்பினர்களுடன் மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்கவுள்ளாா் என நம்பிக்கை தொிவித்தாா். 

முன்னதாக அண்ணாமலை, திருவையாறு தொகுதியில் வயலில் இறங்கி பெண்களுடன் சோ்ந்து நாற்று நடவுப்பணியில் ஈடுபட்டாா்.