தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் விருப்பத்துக்கு மாறாக எதுவும் நடக்காது... அமைச்சர் மஸ்தான் பேட்டி...

தமிழகத்தில் இருக்கும் இலங்கை தமிழர்களை ஒருபோதும் அவர்களின் விருப்பத்திற்கு அப்பால் தாயகத்திற்கு தமிழக அரசு அனுப்பாது என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் விருப்பத்துக்கு மாறாக எதுவும் நடக்காது... அமைச்சர் மஸ்தான் பேட்டி...
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல துறை சார்பாக இலங்கை தமிழ் அகதிகள் முகாமிற்கு வெளியே வசிக்கும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரொனா சிறப்பு நிவாரண நிதி 4000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு மேடையில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, 
 
தமிழகத்தில் மொத்தமாக 13 ஆயிரம் பேர் இலங்கை தமிழர்கள் இருந்தார்கள்,  3000 பேர் வெளி மாநிலங்களுக்கு சென்று விட்டார்கள். 10 ஆயிரம் பேர் இருந்த நிலையில் தற்போது 8 பேரை கண்டப்பட்டு இருக்கிறோம் அவர்களுக்கான கொரொனா நிதி வழங்கப்பட உள்ளதாக கூறினார்.
 
தொடர்ந்து பேசிய அமைச்சர் மஸ்தான் கூறியதாவது,
 
தமிழ்நாடில் இருக்கும் 108 அகதி முகாம்களில், 106 முகாம்கள் அரசின் கட்டுப்பாடு. 2 முகாம்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 5 கோடியே 42 லட்சம் மதிப்பில் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளது. இதில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற உள்ளனர். உங்களுக்கு குடியுரிமை பெற்று தருவது தான் முதல்வரின் விருப்பம். அது குறித்து பிரதமரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் பேசியுள்ளார். தாயுள்ளதோடு நேசிக்கும் தமிழ் நாடு இலங்கை தமிழர்களுக்கு என்றும் பாதுகாப்பாக இருக்கும். நீங்கள் விருப்ப படும் வரை இங்கு நிம்மதியாக இருக்கலாம். உங்களுக்கான உதவிகள் உரிமைகள் சிறப்பு சலுகைகள் உள்ளிட்டவை தொடர்ந்து கிடைக்கும் என்றார். 
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மஸ்தான்,
 
தமிழகம் முழுவதும் இலங்கை தமிழர்கள் 13, 553 பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு 4000 ரூபாய் வழங்க இருக்கிறோம். நாளை வெளிநாடுவாழ் தமிழர்கள் முகாம்களுக்கு ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். அவர்களின் குடியுரிமைக்காக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறோம்.
 
மத்திய அரசிடமிருந்து தீர்வு கண்ட பிறகுதான் தமிழக அரசு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முகாம்களில் இருப்பது தான் அவர்களுக்கு பாதுகாப்பு என்று இலங்கைத் தமிழர்கள் நினைக்கிறார்கள்.
 
இலங்கை தமிழர்களுக்கு இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு குடியிரிமை வழங்குவது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பேசி வருகிறது என்றும் இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என்றார்.