முகக்கவசம் அணியாதவருக்கு ஷூ காலால் உதை... காவல்துணை இணை ஆணையருக்கு நோட்டீஸ்... 

முகக்கவசம் அணியாத கோழிக் கடைக்காரரை காவல் உதவி ஆய்வாளர் ஷூ காலால் மிதித்த விவகாரத்தில் சென்னை காவல்துறை தெற்கு இணை ஆணையர் 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முகக்கவசம் அணியாதவருக்கு ஷூ காலால் உதை... காவல்துணை இணை ஆணையருக்கு நோட்டீஸ்... 
Published on
Updated on
1 min read

முகக்கவசம் அணியாத கோழிக் கடைக்காரரை காவல் உதவி ஆய்வாளர் ஷூ காலால் மிதித்த விவகாரத்தில் சென்னை காவல்துறை தெற்கு இணை ஆணையர் 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள கோழி இறைச்சி கடையில் ஊழியர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் பணியாற்றியது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கோ கேள்வி எழுப்பியபோது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கடை ஊழியரை ஷூ காலால் மிதித்துள்ளார். இதுதொடர்பான கண்காணப்பு கேமரா பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், ஜான் போஸ்கோ பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் துரை. ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்தும், உதவி ஆய்வாளர் மீதான நடவடிக்கை குறித்தும் சென்னை காவல்துறையின் தெற்கு இணை ஆணையர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com