
நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.ரவீந்திர நாத் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரது வெற்றி செல்லாது என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், ஓ.பி.ரவீந்திரநாத், நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.