அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக இன்று டெல்லி சென்றார். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரிலேயே, அவர் டெல்லி சென்றதாக கூறப்பட்டது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள அவர், நாளை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதிமுகவில் உள்கட்சிக் குழப்பம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மட்டும் தனியாக டெல்லி சென்றது பல்வேறு சர்ச்சைகளையும், யூகங்களையும் கிளப்பியது.