ஒடிசா ரயில் விபத்து - சரத்குமார் இரங்கல்

ஒடிசா ரயில் விபத்து -  சரத்குமார் இரங்கல்
Published on
Updated on
1 min read

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் இரங்கல்

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில், கொல்கத்தா - சென்னை வந்துக்கொண்டிருந்த கோரமண்டல்  விரைவு ரயில், ஹவுரா ரயில் மற்றும் சரக்கு ரயில் நேற்றிரவு நேருக்கு நேர் மோதி தடம் புரண்டு  விபத்துக்குள்ளாகிய அதிர்ச்சி தகவல் மிகுந்த மனவேதனையளிக்கிறது.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ரயிலில் பயணித்தவர்கள் விபரம் வெளியிடப்படாத நிலையில், 288 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 900 பேர் படுகாயமடைந்ததாகவும் வெளிவரும் தகவல் நெஞ்சை கணக்கச் செய்கிறது. இந்த ரயிலில் பயணித்தவர்களின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களின் தற்போதைய மனநிலையை எண்ணும் போது, ஆறுதல் கூறி தேற்றுவதற்கும் வார்த்தைகள் இல்லை. 

துரதிர்ஷ்டவசமான இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்  குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கலையும், படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வரவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 

இந்திய நாட்டையே துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் இந்த ரயில் விபத்திற்கான காரணத்தை விசாரித்து கண்டறிய வேண்டும். தொழில் நுட்பங்கள் வளர்ந்த இக்காலத்தில் இதுபோன்ற பெரும் விபத்து நடைபெறாமல் இருக்க, மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு -  ஒடிசா அரசு - மத்திய அரசு இணைந்து மீட்பு படையினரை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ள நிலையில், மீட்புப்பணிகளை மேலும் துரிதமாக மேற்கொண்டு, பாதுகாப்பாக உயிர்களை மீட்டிட கேட்டுக் கொள்கிறேன்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com