ஒடிசா ரயில் விபத்து - விராலிமலையில் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் மௌன அஞ்சலி...!

கொரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்த பயணிகளின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, விராலிமலை விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் வெல்கம் மோகன் தலைமையில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
நேற்று இரவு சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில் 294 பயணிகள் உயிரிழந்தனர் . 300-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க | மதுரையில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை...!
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி விராலிமலை விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் விபத்துக்குள்ளான ரயில் படங்களுக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள், பள்ளி வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க | திருப்பரங்குன்றம் திருவிழாவில் இந்திய வரைபடத்துடன் திரிந்த வங்கதேச இளைஞர்...! காரணம் என்ன...?