அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்... கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை தொடங்கும் அதிகாரிகள்!! 

அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்... கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை தொடங்கும் அதிகாரிகள்!! 

தொடர் விடுமுறையால் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டின் முக்கிய கோடை வாசஸ்தளங்களான நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கொடைக்கானல், மேட்டுபாளையம், குற்றாலம், பல்வேறு பகுதிகளில் என மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

இதனால் பல்வேறு மாவட்டங்களில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றன.  கோடை சீசன் தொடங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகரித்து வருகின்றன.  நகரின் முக்கிய சுற்றுலா தலங்களான வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி, பாம்பார் அருவி, நட்சத்திர ஏரி, பிரையண்ட்பூங்கா, மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.  மேலும் நட்சத்திர ஏரியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீருற்றும் அனைவரையும் கவர்ந்து வருகிறது.  நேற்று சாரல் மழையில் நனைந்தபடியே ஏரியில் படகு சவாரி மற்றும் ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர்.  சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள், கைடுகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த வாரம் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை தொடங்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே மலர்கண்காட்சி கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தொடங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க:  சென்னை கேகே நகரை சேர்ந்த பிரபல ரவுடி ரமேஷ் வெட்டிக் கொலை...!!