இரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து, முதியவர் தற்கொலை...! போலீசார் தீவிர விசாரணை..!

திருச்செந்தூர் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து, அடையாளம் தெரியாத முதியவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு நேற்று இரவு 7.10 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயில் திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு தண்டவாளத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருநெல்வேலி ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட முதியவர் நீல நிறத்தில் வெள்ளை கோடு போட்ட சட்டையும் நீல நிறத்தில் கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தார் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.