மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட முதியவர்... சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Published on
Updated on
1 min read

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே சுந்தரம் என்ற வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளி முதியவர் வசித்து வந்தார்.

கடந்த 18.10.23 தேதி காலை 06.15 மணியளவில் கோவில் அருகே கை கம்பை ஊன்றி நடந்து சென்று கொண்டிருந்த போது, சாலையில் நின்று கொண்டிருந்த மாடு திடீரென முதியவரை முட்டி தூக்கி வீசியது.

அருகில் இருந்த பொதுமக்கள் முதியவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஒமந்தூரர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், 27.10.23 தேதி இரவு 23.00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி ஓமந்தூரார் மருத்துவமனையில் இறந்து விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ்அவுஸ் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்                     

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com