மார்ச் 28 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

மார்ச் 28 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அதன் மாநில தலைவர் அன்பரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் மார்ச் 28 ஆம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக முழுவதும் அடையாள வேலை நிறுத்தம்

சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் அதன் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அன்பரசன் கடந்த அரசு அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிராகரித்ததாகவும் அதன்பின் வந்த கழக அரசு

 கடந்த 20 மாத காலமாக கோரிக்கைகளை நிறைவேற்றாமல் செயல்பட்டுவருவதாகவும் முக்கிய கோரிக்கைகளான பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்றுதல், முடக்கப்பட்ட சரண்டர் தொகையை விடுவித்தல், அகவிலைப்படி வழங்குதல், சத்துணவு,அங்கன்வாடி,எம்.ஆர்.பி செவிலியர்கள், ஊர்புற நூலகர்கள்,வருவாய் கிராம உதவியாளர் உள்ளிட்ட 3 லட்ச பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், 6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புதல், மத்திய அரசின் 20 மாத நிலுவை ஊதியத்தை வழங்குதல், சாலை பணியாளர்களுக்கு 41 மாதத்தை வேலை மாதமாக ஏற்றல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட முன்னெடுப்பை செய்தும் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு.

கோட்டை முற்றுகை போராட்டம்

தமிழக முதல்வரை 6 முறை சந்தித்தும் பரிசீலிப்பதாக மட்டுமே வரும் பதிலை கண்டித்தும் வருகிற 28-03-2023 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமும், அதனையும் கண்டுகொள்ளாதபட்சத்தில் பட்ஜெட் கூட்ட தொடரின்போது கோட்டை முற்றுகை போராட்டமும் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மாநில முழுவதுமிருந்து இந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com