தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்... பராமரிப்பின்றி இடிந்து விழுந்த பக்கவாட்டு சுவர்....!

தஞ்சை - திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில்... பராமரிப்பின்றி இடிந்து விழுந்த பக்கவாட்டு  சுவர்....!

உரிய பராமரிப்பின்றி காரணத்தால், தஞ்சை- திருச்சி  தேசிய நெடுஞ்சாலையின் உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் சரிந்து விழுந்து விபத்து.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 2008 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்நிலையில் முக்கிய சுற்றுலா தளத்தின் வழித்தடமான இந்த தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகன போக்குவரத்து தினமும் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த சாலையை முறையாக பராமரிக்காத காரணத்தினால் இந்த உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் இன்று அதிகாலை சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து அங்கு வந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் அந்த பாலத்தின் பக்கவாட்டு சுவரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஆனால் பாலத்தின் பக்கவாட்டு சுவரை சீரமைக்கும் போது அடுத்தடுத்த பகுதிகளில் சுவர் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பாலத்தின் தரம் குறித்து ஆய்வு செய்து முழுமையாக பாலத்தை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 இதையும் படிக்க     | "தலை தூக்கும் தீண்டாமை" அமமுக செயற்குழு கண்டன தீர்மானம்!