அட்சய திருதியை நாளில்.... அதிரடியாய் குறைந்த தங்கம் விலை....! ஆர்வத்தில் மக்கள்...!

அட்சய திருதியை நாளில்.... அதிரடியாய் குறைந்த தங்கம் விலை....! ஆர்வத்தில் மக்கள்...!


அட்சய திருதியை பண்டிகையை முன்னிட்டு தங்கம் வாங்குவதற்காக நகைக்கடைகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஓரிரு கடைகளில் மட்டும் அளவுக்கு அதிகமான கூட்டம் காணப்படுகிறது. 

வழக்கமாக அட்சயதிருதியை ஒருநாள் மட்டுமே கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆண்டு நாளை மதியம் வரை அதாவது ஒன்றரை நாட்கள் வரை கொண்டாடப்படுவதால் வாடிக்கையாளர்கள் நாளை வரை தங்கம் வாங்குவார்கள் என நகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு உலக சந்தையில் தங்க முதலீட்டை குறைத்திருப்பதால் இன்று தங்கத்தின் விலை இந்திய அளவில் குறைந்திருப்பதும் மக்களுக்கு ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

குறிப்பாக சென்னை தி நகரில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளனர். குறிப்பாக லலிதா ஜீவல்லரி நகைக் கடைகளில் 1% தங்க நகைகளுக்கும்,  1 காரட் வைர நகைகளுக்கு 2000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் பொது மக்களின் வசதிக்கேற்ப இரவு 10 மணி வரை நகைக்கடைகள்  திறந்திருக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்தி அக்ஷய திருதையின் அன்னாளில் நகைகளைப் பெற்று பயனடையுமாறும்  கடை உரிமையாளர்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

 இதையும் படிக்க    }  தங்கம் விலை ரூ 480 குறைவு...!!

அக்ஷய திருதியை நன்னாளில் நகை எடுத்தால் செல்வம் செழிக்கும் என்று முன்னோர் சொல்படி இன்று நகைகள் வாங்க வந்திருப்பதாகவும், மேலும் லலிதா ஜூவல்லரி கடையில் சேதாரம் என்பது முழுவதிலும் ஆக இல்லை அனைத்து விதமான நகைகளும் இங்கே விற்பனை செய்யப்படுகிறது விலையும் ஏற்றார் போல் உள்ளது இன்று பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

 இதையும் படிக்க    } 20 ஆண்டுகள் குடியிருந்த பங்களா...!! காலி செய்யும் ராகுல்...!!


 இதையும் படிக்க    }