களைகட்டும் மாதவரம் ரெட்டேரி ஆட்டு சந்தை.. பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடு விற்பனை அமோகம்!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாதவரம் ரெட்டேரி ஆட்டு சந்தையில் வியாபாரம் களைகட்டி உள்ளது.

களைகட்டும் மாதவரம் ரெட்டேரி ஆட்டு சந்தை.. பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடு விற்பனை அமோகம்!!

சென்னை மாதவரம் ரெட்டை ஏரி அருகே நடைபெறும் ஆட்டு சந்தையில் ஆடுகளை வாங்கவும், விற்பனை செய்வதற்காகவும், வேலூர், செஞ்சி, திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலம் ஒங்கோல், விஜயவாடா, கடப்பா போன்ற பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் இங்கு வருகை தருகின்றனர்.

இந்த சந்தையில் செம்மறி ஆடு, வெள்ளாடு உள்ளிட்ட ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது. 30 கிலோ வரையிலான ஆடுகள் சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சந்தை செயல்படாத நிலையில், தற்போது ஆடுகள் அதிக விலை போகிறது. ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் இஸ்லாமியர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் ஆடுகளை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.