ஒரு ரைடா இரண்டு ரைடா தொடர்ந்து சோதன....இது அரசியல் காழ்ப்புணர்ச்சி...முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன்

ஒரு ரைடா இரண்டு ரைடா மூன்று ரைடா தொடர்ந்து சோதனை பண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள், இது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

ஒரு ரைடா இரண்டு ரைடா  தொடர்ந்து சோதன....இது அரசியல் காழ்ப்புணர்ச்சி...முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன்

மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறுகையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து கேள்வி கேட்டபோது, ஒரு ரைடா இரண்டு ரைடா மூன்று ரைடா தொடர்ந்து சோதனை பண்ணிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்றும் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றார் 

மேலும் அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் பெற்று ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என நியமனம் பெற்றிருப்பதாகவும், தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் அங்கீகாரம் பெற்று நாடாளுமன்ற தேர்தல் , சட்ட மன்ற தேர்தல் என பல தேர்தல்களில் எதிர்கொண்டுள்ளதாகவும் கூறிய அவர், எனவே கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை எனவும் கூறினார்.

சசிகலா மீது அதிமுக வழக்கு தொடரவில்லையே என்பது குறித்த கேள்விக்கு 72 மணி நேரம் தான் ஆகியிருக்கிறது என அவர் தெரிவித்தார்.