காட்பாடியில் கூடுதலாக காவல் நிலையம் அமைக்கப்படும் - அமைச்சர் உறுதி!

காட்பாடியில் கூடுதலாக காவல் நிலையம் அமைக்கப்படும் - அமைச்சர் உறுதி!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் குற்ற நடவடிக்கைகள் குறைய மேலும் ஒரு காவல் நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

வேலூர் காட்பாடி அருகே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் மற்றும் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான நியாய விலை கடைகளை  அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்கள்  தரமானதாக இருந்ததில்லை என பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

இதையும் படிக்க : திருச்சி மிகப்பெரிய மையமாக மாறும் - அமைச்சர் கே. என்.நேரு!

ஆனால், தற்போது முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறினார்.

மேலும், காட்பாடியில் 200 படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனை இந்தாண்டு துவக்கப்படும் என்றும், காட்பாடியில் கூடுதலாக ரயில்வே அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், காட்பாடியில் குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதலாக காவல் நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.