மின் வயர் அறுந்து வீட்டின் மேல் விழுந்து ஒருவர் பலி...

போளூர் அருகே கஸ்தம்பாடி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவரின் வீட்டின் குறுக்கே மின் ஒயர் செல்வதால் நேற்று இரவு காற்று மழை பெய்தது மின் வயர் அறுந்து வீட்டின் மீது விழுந்ததில் கறவை மாடு உட்பட ராஜேந்திரன் மகன் செல்வரசு என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மின் வயர் அறுந்து வீட்டின் மேல் விழுந்து ஒருவர் பலி...
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தில் மயான தெருவில் செல்வரசு தந்தை பெயர் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் குறுக்கே மின்சார வயர்கள் செல்வதால் அதனை மாற்றக்கோரி கோரியும் மின்கம்பத்தை மாற்று  இடத்தில் அமைக்க கோரியும் பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை.

மின்வாரிய ஊழியர்களின் இந்த அலட்சியத்தின் காரணமாக நேற்று இரவு காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது, வீட்டின் குறுக்கே சென்ற மின் வயர் அறுந்து விழுந்ததில் கறவை மாடு மின்சாரம் தாக்கப்பட்டு இருந்த நிலையில் மற்றொரு கறவை மாடு  கத்தியதில்  வெளியே வந்த செல்வரசு பசு மாட்டினை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த மின் உயரை  மிதித்ததில் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டதில் பசு மாடு உடன் சேர்ந்து செல்வரசு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து களம்பூர் காவல்துறையினர் நேரில் ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com