ஒருவரின் செயல் இன்னொருவர் வளர்ச்சிக்கு தடையாக இருக்க கூடாது...! கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்...!!

ஒருவரின் செயல் இன்னொருவர் வளர்ச்சிக்கு தடையாக இருக்க கூடாது...! கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்...!!

ஒருவரின் செயல் இன்னொருவர் வளர்ச்சிக்கு தடையாக இருக்க கூடாது என சட்ட மன்றத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே. எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னேறிய சமுதாயங்களை சேர்ந்த சிலர் பழங்குடியினர் என்றும் தாழ்த்தப்பட்டோர் என்றும் சாதி சான்றிதழை வாங்கி வருகின்றனர். இதனால் உண்மையிலேயே இந்த சலுகைகளை அனுபவிக்க வேண்டிய சமுதாய ரிதியாக ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு அந்த சலுகைகள் முழுமையாக பொய் சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாக நிலவி வருகிறது. 

இதனை உறுதிப்படுத்தும் விதமாக  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே. எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் "ஒருவரின் செயல் இன்னொருவர் வளர்ச்சிக்கு தடையாக இருக்க கூடாது" என தெரிவித்துள்ளார். இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது  திரு வெற்றியூர் சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.சங்கர்  எழுப்பி கேள்விக்கு பதில் அளிக்கும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் "எல்லா சமுதாய மக்களும் பழங்குடியினர் சான்றிதழ் வாங்குவதில் அக்கறையாக இருக்கிறார்கள். ரெட்டியார் சமூகத்தினர், கொண்டா ரெட்டி என சான்றிதழ் கேட்கிறார்கள்; நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் காட்டு நாயக்கர் சான்றிதழ் வாங்க வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், பல்வேறு முன்னேறிய சமுதாயமும் இது போன்று சாதியை மாற்றி சான்றிதழைகளை கேட்கிறார்கள் என தெரிவித்த அவர்  "ஒருவரின் செயல் இன்னொருவர் வளர்ச்சிக்கு தடையாக இருக்க கூடாது"  என சுட்டிக் காட்டியுள்ளார்.