திமுக நிர்வாகிகளுக்கு ஒரு வாரம் காலக்கெடு...எச்சரிக்கை விடுத்த கட்சி தலைமை!

திமுக நிர்வாகிகளுக்கு ஒரு வாரம் காலக்கெடு...எச்சரிக்கை விடுத்த கட்சி தலைமை!
Published on
Updated on
1 min read

திமுகவில் உறுப்பினர் உரிமைச் சீட்டை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என திமுக தலைமை எச்சரித்துள்ளது. 

திமுகவில் கடந்தாண்டு மாவட்ட செயலாளர், மாவட்ட துணை செயலாளர்கள், பொருளாளர், அவைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக 15-வது உட்கட்சி பொதுத் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலுக்காக பதிவு செய்திருந்த உறுப்பினர்களுக்கு ஏற்கனவே, தலைமை அலுவலகத்திலிருந்து உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சில இடங்களில் உள்ள நிர்வாகிகள், உரிமை சீட்டுகளை தங்களிடம் ஒப்படைக்கவில்லை என உறுப்பினர்கள் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களிடம் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமை அலுவலகத்திலிருந்து உறுப்பினர் உரிமைச் சீட்டினை பெற்ற நிர்வாகிகள் ஒரு வார காலத்திற்குள் உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், அவ்வாறு ஒப்படைக்காத நபர்கள் மீது புகார் வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com