ஆன்லைன் ரம்மி சூதாட்டம் - ஆளுநரை திரும்பபெற வேண்டும்

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ரத்து செய்யும் மசோதாவை ஆளுநர் அனுமதி வழங்காதது ஏன் - 20 சட்ட மசோதாக்களை முடக்கி வைத்துள்ள ஆளுநரை திரும்ப பெற வேண்டும்

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் - ஆளுநரை திரும்பபெற வேண்டும்

கிருஷ்ணகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறைந்த மூத்த தோழர் நாகரத்தினம் அண்ணாஜி பட திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு அண்ணாஜி படத்தை திறந்து வைத்து  சிறப்புரையாற்றினார்.

மேலும் படிக்க | அரசிதழில் விடுபட்ட மஞ்சுவிரட்டு.. அறவழியில் போராட்டம்.. மஞ்சுவிரட்டு நல சங்கம் அறிவிப்பு

மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்யும் மசோதாவிற்கு ஆளுநர் அனுமதி வழங்காமல் உள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டு என்ன  கால்பந்து போட்டியா, கிரிக்கெட் போட்டியா, விளையாட்டு போட்டியா, ஒரு சூதாட்டத்தை தடை செய்ய அனுமதி வழங்க மாட்டேன் என சொல்வது என்ன ஆளுநர், எதை கேட்டாலும் ஆளுநர் மாளிகையில் இருந்து பதில் வருவதில்லை இது மட்டும் இல்லாமல் 20வதுக்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை ஆளுநர் முடக்கி வைத்திருக்கிறார். இப்படி சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு இருப்பது மாநில மக்களை துரோகம் செய்கிற, வஞ்சிக்கிற, செயலாக பார்க்கிறோம். எனவே ஆளுநரை திரும்ப பெற வேண்டி வழங்கிய மனுவை வலியுறுத்தி மிகப்பெரிய இயக்கத்தை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோ ம் என பேசினார்