
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்துள்ள திம்மாவரம் கிராமத்தில் கடந்த 7 நாட்களுக்கு முன்பாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
அப்பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரசு ஆன்லைன் முன்பதிவு மூலம் கொள்முதல் செய்து வந்தது. இந்தநிலையில், திடீரென ஆன்லைன் முன்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.