இலங்கைத் தமிழர்களுக்கு குடியிருப்புகள் திறந்து வைப்பு...!

வேலூர் மாவட்டம் கந்தனேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைத்தார்.

திமுக முப்பெரும் விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வேலூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கந்தனேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு  மையங்களில் உள்ளவர்களுக்கு கட்டப்பட்டுள்ள ஆயிரத்து 591 குடியிருப்புகளை திறந்து வைத்தார். பின்னர் குடியிருப்புத் திட்ட பயனாளிக்கு வீட்டின் சாவி மற்றும் மற்ற பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினார்.

இதையும் படிக்க : விஸ்வாவை என்கவுண்ட்டாில் போட்டு விடவா? உதவி ஆய்வாளா் வீடியோ வைரல்!

தொடர்ந்து மேல்மொணவூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் ஒரு வீட்டை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்து சில வீடுகளை பார்வையிட்டார். பின்னர் அப்பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர்களிடம் கலந்துரையாடினார்.