நவம்பர் 1-ம் தேதி முதல் 1- 8 வகுப்பிற்கு பள்ளிகள் திறப்பு: ஆலோசனை கூட்டம்  

நவம்பர் 1-ம் தேதி முதல் 1- 8 வகுப்பிற்கு பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது .  
நவம்பர் 1-ம் தேதி முதல் 1- 8 வகுப்பிற்கு பள்ளிகள் திறப்பு: ஆலோசனை கூட்டம்   
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலின் 2-வது அலையால் நடப்பாண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்குப் தொடர்ந்து பாடங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தொற்றின் பரவல் குறைந்ததால், 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்து அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் செப்.1-ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் உள்ளதால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு ஏற்கெனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதால் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் முதன்மை செயலாளர் காகர்லா உஷா தலைமையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது .

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com