தமிழக ஆளுநரை சந்திக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி

தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, உள்ளாட்சி தேர்தல் முறைகேடு உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து, இன்று ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க உள்ளார்.

தமிழக ஆளுநரை சந்திக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி

தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, உள்ளாட்சி தேர்தல் முறைகேடு உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து, இன்று ஆளுனரை சந்தித்து புகார் அளிக்க உள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் நடைபெற்றது. தேர்தலில், ஆளும் கட்சியான தி.மு.க., அமோக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பெரும் தோல்வியை சந்தித்தது. மாநில தேர்தல் ஆணையம் உதவியுடன், ஆளும்கட்சி முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக, அ.தி.மு.க. , குற்றம் சாட்டியது. இந்நிலையில், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, இன்று காலை 11 மணிக்கு, ஆளுனர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார். அப்போது, உள்ளாட்சி தேர்தல் முறைகேடு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை போன்றவை தொடர்பாக, ஆதாரங்களுடன் புகார் அளிக்க உள்ளார். அவருடன் அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செல்ல உள்ளனர்.