குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி பொருட்களை வழங்க உத்தரவு.!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும் என அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி பொருட்களை வழங்க உத்தரவு.!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும்போது விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கைரேகை பதிவு செய்வதில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதாகவும் இதனால் நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கும் செயல்பாடுகள் குறைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதனை சரி செய்யும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி உடனடியாக வழங்கவேண்டும் என அனைத்து நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் கைரேகை குறியீடு பதிவு அங்கீகரிக்கப்படாத நேரங்களில் விற்பனை முனைய இயந்திரத்தில் குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்து, உரிய பதிவேட்டில் ஒப்புதலைப் பெறவேண்டும் என்றும், தடையில்லாமல் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் எனவும் அறுவுறுத்தப்பட்டுள்ளது.