கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: நவ.20-ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவு...!

Published on
Updated on
1 min read

வெகு விரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் தயாராகி வரும் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு,  ஆம்னி பேருந்துகளுக்கான பேருந்து நிலையம் அமைக்கும் பணியை விரைவாக முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் மாதம் 20ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைய ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, இறுதி கட்ட பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாகவும், குறிப்பிட்ட தேதியில் விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளை கண்டித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com