கஞ்சா விற்பனைக்கு கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் வெளிமாநிலத்தவர்கள்

போரூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது 10 கிலோ கஞ்சா பறிமுதல்

கஞ்சா விற்பனைக்கு கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் வெளிமாநிலத்தவர்கள்

வட மாநிலத்திலிருந்து வேலைக்கு வருவது போல் கஞ்சா எடுத்து வந்தது அம்பலம்போரூரில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாக வந்த தகவலைதடுத்து போரூர் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

மேலும் படிக்க | யாரும் சுத்தமாக இல்லை. அண்ணாமலையை சூட்சுமமாக தாக்கிய காயத்ரி ரகுராம்..! அதுவும் நள்ளிரவு 12 மணிக்கு

இந்த நிலையில் போரூரில் தீவிரமாக கண்காணித்த போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை மடக்கி சோதனை செய்தபோது அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது இதையடுத்து அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த விசாரித்தபோது பிடிபட்டவர்கள் கொளத்தூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(28), நெற்குன்றத்தைச் சேர்ந்த பரத்(24), என்பதும் இவர்கள் அளித்த தகவலின் பேரில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் வைத்து வட மாநிலத்தை சேர்ந்த சத்யராஜன் மலக்கார்(42), முகமது மசூத்(30), உள்ளிட்ட மேலும் இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா என மொத்தம் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது வட மாநிலங்களில் இருந்து வேலைக்கு வருவது போல் கஞ்சாவை மொத்தமாக எடுத்து வந்து போரூர் பகுதியில் சப்ளை செய்தது தெரியவந்தது.

மேலும் படிக்க | கொரோனா பாதித்த முதியவரின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..! காரணம் என்ன?

மேலும் ரயிலில் கொண்டு வரும்போது வாசனை பத்தாமல் இருப்பதற்காக துணியில் கஞ்சா மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் இருந்து 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.