கைத்தொழிலை பறிக்கும் வெளிநபர்கள்... வேதனையில் தோடர் இன மக்கள்...  

நீலகிரி மாவட்டத்தில் தோடர் இன மக்களின் கைத்தொழிலை வெளிநபர்கள் செய்வதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தோடர் இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கைத்தொழிலை பறிக்கும் வெளிநபர்கள்...  வேதனையில் தோடர் இன மக்கள்...   

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர், கோத்தர், இருளர், காட்டு நாயக்கர், குறும்பர், பனியர், என ஆறு பழங்குடியின வகையைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஆண்டாண்டு காலமாக கைவினைப் பொருட்கள் மற்றும் ஆடைகள் தயாரிப்பு தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தோடர் இன மக்கள் தயாரித்து வரும் போர்வை, சால்வை, பூ வேலை என மேலும் பல ஆடைகள் அவர்களின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கலைநயத்தோடு தயாரித்து வருகின்றனர் இதற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மேற்கொண்டுவரும் இத்தொழிலை அவர்கள் இன ஆண்கள் கூட செய்யக்கூடாது எனவும் பெண்கள் மட்டுமே இந்த ஆடைகள் வடிவமைப்பு தொழிலை செய்ய ஒரு கோட்பாடு உள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக வெளிநபர்கள் இவர்களின் ஆடைகள் உற்பத்தி தொழிலை மேற்கொள்வதால் இத்தொழிலை நம்பி உள்ள தோடர் இன மக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

இது குறித்து தொடர் என பெண்கள் கூறுகையில் ஆண்டாண்டு காலமாக இத்தொழிலை நம்பி வாழ்வாதாரம் ஈட்டி வரும் தங்களுக்கு வெளி நபர்கள் ஆடைகள் உற்பத்தி செய்து வருவதால் தங்களுக்கு மிகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் தங்களிடம் உற்பத்தி செய்யப்பட்ட பொருளை கொள்முதல் செய்து விற்பனை செய்தால் கூட தங்களுக்கு வருமானம் இருக்கும் எனவும் ஆனால் வெளி நபர்கள் நேரடியாக தங்களது தொழிலை மேற்கொண்டு விற்பனை செய்வதால் மிகவும் பாதிப்படைந்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே உடனடியாக இதற்கு தீர்வு காணும் வகையில் தோடர் இன மக்கள் மேற்கொண்டுவரும் ஆடை வடிவமைப்பு தொழிலை வெளிநபர்கள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தவறும் பட்சத்தில் நீலகிரி முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக தோட இன மக்கள் தெரிவித்தனர்.