நிரம்பி வழியும் வைரமேக தடாகம் ஏரி... ஆர்ப்பரித்து வெளியேறும் உபரிநீர்...

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள வைரமேக தடாகம் ஏரி, கனமழை காரணமாக நிரம்பி வழிகிறது.

நிரம்பி வழியும் வைரமேக தடாகம் ஏரி... ஆர்ப்பரித்து வெளியேறும் உபரிநீர்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றானது உத்திரமேரூர் ஏரி சுமார் 5500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி 20 அடி ஆழம் கொள்ளளவு கொண்டது. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த ஏரி வைரமேக தடாகம் என்று அழைக்கப்படும் இந்த ஏரிக்கு பிரதான நீர்வரத்து ஆக  செய்யாறில் இருந்து அனுமந்தண்டலம் தடுப்பணையில் இருந்து கால்வாய் மூலம் நீர் வந்து சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கால்வாய்கள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. 

இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் காட்டுப்பாக்கம், மேனல்லூர், அரசாணிமங்கலம், காவனூர்புதுச்சேரி, கம்மாளம்பூண்டி புலியூர் மற்றும் அதை சுற்றியுள்ள 18 கிராமங்களை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் இது மட்டுமின்றி, கட்டியாம்பந்தல், பாபநல்லூர், வேடந்தாங்கல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏரிகள் நிரம்புவதற்கு உத்தரமேரூரில் இருந்து வெளியேறும் உபரி நீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த ஏரியின் நீர் வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி சீரமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.