எடப்பாடி பழனிசாமியை  கட்சியை விட்டு நீக்கி, சசிகலாவை தலைமையாக்க வேண்டும்...

எடப்பாடி பழனிசாமியை  கட்சியை விட்டு நீக்க வேண்டும் , சசிகலா அல்லது ஒ.பி.எஸ் அதிமுகவின் ஒன்றைத் தலைமையாக வேண்டும் என பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார் 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் மாநில செயலாளர் புகழேந்தி  சென்னை உயர்நீதிமன்ற நுழைவுவாயிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக சரிவை நோக்கி சென்றுகொண்டிருப்பதால் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சரியான முடிவை எடுக்க வேண்டும், எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்கி சசிகலா அல்லது ஓபிஎஸ் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார். 

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிய போது நல்லவராக இருந்த சசிகலா இப்போது கெட்டவராக தெரிகிறார் எனக்கூறிய புகழேந்தி, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்க்கு எதிராக முனுசாமி போன்றவர்கள கருத்து கூறுவது ஏற்புடையதல்ல என்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மருது சகோதரர்களுக்கு சிலை எழுப்பப்படும் என அறிவித்துள்ளதையும்முதல்வரின் செயல்பாடுகளையும் மனதார பாராட்டுவதாக கூறிய புகழேந்தி, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அறிவித்தபடி மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் பெயர் வைக்காததால் தென்மாவட்ட மக்கள் அதிமுக மீது அதிருப்தியில் உள்ளதாகவும், திமுக அரசு மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் பெயரை வைக்க வேண்டும் எனவும் புகழேந்தி கேட்டுக் கொண்டார்.