பாரா வாலிபால் - ஆண்கள் பிரிவில் தமிழக அணி முதலிடம்...!

பாரா வாலிபால் - ஆண்கள் பிரிவில் தமிழக அணி முதலிடம்...!

தென்னிந்திய அளவில் நடைபெற்ற பாரா வாலிபால் போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி முதலிடம் பெற்றுள்ளது.

தென்னிந்திய அளவிலான பாரா வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகள்:

கோவை ரோட்டரி கிளப் சார்பில் மாநிலங்களுக்கு இடையே தென்னிந்திய அளவிலான பாரா வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகள் பெரிய நாயக்கன் பாளையத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

பெண்கள் த்ரோபால் போட்டி:

இதில் பெண்கள் த்ரோபால் போட்டியில் கர்நாடகா அணி முதலிடத்தையும், ஆந்திரா, தமிழ்நாடு அணிகள் இரண்டு மற்றும் 3-ஆம் இடங்களையும் பிடித்தன. பெண்கள் பிரிவில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக கர்நாடக அணியை சேர்ந்த கீதா தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தமிழகத்தில் முடிந்த நடைப்பயணம்... கேரளாவில் தொடக்கம்...!

வாலிபால் ஆண்கள் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி:

இதேபோல், வாலிபால் ஆண்கள் இறுதிப் போட்டியில், புதுச்சேரியை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. ஆந்திரா, புதுச்சேரி அணிகள் 2 மற்றும் 3-ஆம் இடங்களை கைப்பற்றின. அதேபோன்று, சிறந்த விளையாட்டு வீரராக தமிழகத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

தேசிய அளவில் போட்டிகளை நடத்த ஏற்பாடு:

கடந்த நான்கு ஆண்டுகளாக மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டிகள் தற்போது மாநிலங்களுக்கு இடையே நடத்தப்பட்டதாகவும், வரும் ஆண்டுகளில் தேசிய அளவில் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்து வருவதாகவும் ரோட்டரி கிளப் கோவை திட்ட தலைவர் மரிய விசுவாசம் தெரிவித்துள்ளார்.