பரந்தூர் விமான நிலையம் காலத்தின் கட்டாயம்...தமிழக அரசு!

பரந்தூர் விமான நிலையம் காலத்தின் கட்டாயம்...தமிழக அரசு!

பரந்தூர் விமான நிலையம் அவசியம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிய விமான நிலையம் பரந்தூரில் அமைவதை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளதாகவும், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைவதை முன்னிட்டு, அதுவரையில் சென்னை மெட்ரோ வழித்தடம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: 44 இடங்களில் ஆர்.எஸ். எஸ் பேரணி நடத்த அனுமதி...எந்தெந்த இடம் தெரியுமா?

காலத்தின் கட்டாயம்:

புதிய விமான நிலையம் மூலம், பயண நேரம் வெகுவாக குறையும் என்றும், வேலை வாய்ப்புகள் பெருகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்ததில் 2-வது விமான நிலைய உருவாக்கம் என்பது காலத்தின் கட்டாயம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.