கொடைக்கானலில் உள்ள அனைத்து பூங்காக்களை நாளை முதல் மூட உத்தரவு...

கொடைக்கானலில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களை நாளை முதல் மூட கோட்டாச்சியர் முருகேசன் உத்தரவிட்டுள்ளார். 

கொடைக்கானலில்  உள்ள அனைத்து பூங்காக்களை நாளை முதல் மூட  உத்தரவு...

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பூங்காக்கள் திறக்கப்பட்டன. கொடைக்கானலில் நீண்ட நாட்களுக்கு பின் பிரையண்ட் பூங்கா , ரோஜா பூங்கா என அனைத்து பூங்காக்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், பொதுமக்கள் வருகையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டி பூங்கா நாளை முதல் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பூங்காக்கள் மூடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.