
நாடாளுமன்றத்தை பிரதமரும், அமைச்சர்களும் பிரசார கூடமாக ஆக்கிவிட்டார்கள் என கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்திய கூட்டணி சார்பில் ஆளுங்கட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் எழுப்பினர். ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் கடைசி நாளில் பதிலுரை அளித்த பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் தொடர்பாக ஒரு கருத்துகளையும் முன்வைக்கவில்லை. மாறாக, எதிர்க்கட்சிகள் கூட்டணி பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கன்னியாகுமரி எம்.பி. விஜய்வசந்த், நாடாளுமன்றத்தில் பிரதமர் மற்றும் அமைச்சரிடம் மணிப்பூர் குறித்து இந்தியா கூட்டணி சார்பில் கேள்வி எழுப்பி, அவர்கள் பதிலளிப்பதற்காக நம்பிக்கை இல்லா தீர்மானம்கொண்டு வந்தோம்.
ஆனால், பிரதமரோ அமைச்சர்களோ மணிப்பூர் பற்றி பேசாமல், நாடாளுமன்றத்தை பிரசார கூடமாக ஆக்கிவிட்டார்கள் என்று விமர்சித்தார்.