"ஆளுநர் பதவி ஒரு அலங்காரப் பதவி.... அதற்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டாம்....! "

பாராளுமன்ற தேர்தலில் நிச்சயமாக இந்த நாட்டிலே ஒரு மாற்றம் வரும் அந்த மாற்றம்........
"ஆளுநர் பதவி ஒரு அலங்காரப் பதவி.... அதற்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டாம்....! "

திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம் தூத்துக்குடி, அண்ணாநகரில் நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், திராவிட மாடல் என்பது சமத்துவம், சமதர்மம், சமூகநீதி, சுயமரியாதை, சம வாய்ப்பு என்ற உயர்ந்த கொள்கையோடு இந்த திராவிட மாடல் ஆட்சி என்ற கொள்கையை தத்துவத்தைக் கொண்டு முதலமைச்சர் ஆட்சி புரிந்து வருகிறார் என்றும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் காட்டிய வழியில் முதலமைச்சர் இந்த ஆட்சி நடத்தி வருகிறார் என்றும் கூறினார். மேலும், "எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்; அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தான் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளில் ஒரே ஒரு உதாரணம் எண்ணவென்றால்,.. இருளர், நரிக்குறவ மக்கள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கியது திராவிட மாடல் ஆட்சி, இருளர், நரிக்குறவர் மக்களுக்கு பழங்குடி பட்டியல் சேர்க்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்து  பழங்குடி மக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து, கடந்த அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசு என்ன கூறுகிறதோ அதற்காக தலையாட்டி கொண்டிருந்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றும் பண்ணவில்லை என்றார். குடியுரிமை சட்டம், மாற்றி இறைச்சி விற்க தடை என கொண்டு வந்த எந்த சட்டத்திற்கும் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர் கீதா ஜீவன் மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து அதை ஒன்றிய அரசு வாபஸ் வாங்கியது என குறிப்பிட்டார்.

அதோடு, நீட் தேர்வு உட்பட மாநில அரசின் எந்த உரிமையையும் எடப்பாடி பழனிச்சாமி நிலை நாட்டவில்லை என்றார். ஆளுநர் என்பவர் எந்த கட்சியின் சாராதவராக இருக்க வேண்டும்; அவர் பாஜகவை சார்ந்தவராக இருந்தாலும் எந்த கொள்கையும் இங்கே திணிக்க வரக்கூடாது அதற்காக திராவிட கொள்கை காலாவதியாகிவிட்டது என்பதை எப்படி கூறலாம்...? என கேள்வி எழுப்பினார்.

மேலும், சனாதனக் கொள்கையை தூக்கிப் பிடிப்பதற்காக ஒருவர் வந்துள்ளார் பொதுவாக இருக்க வேண்டியவர் தமிழ்நாட்டு மக்களுக்காக தமிழின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டியவர் எல்லா பாடத்தையும் அரைகுறையாக படித்துள்ளார். திமுகவை ஒடுக்க வேண்டும் திராவிடக் கொள்கையை நீர்த்துப்போக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆளுநர் இருக்கிறார். ஆளுநர் பாஜக பிரதிநிதியாக இருந்து கொண்டு பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது யார் என்ன சொன்னாலும் நாம் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்றார்.

பின்னர் கனிமொழி எம்.பி. பேசுகையில், ஒவ்வொரு நாளும் புதிய, புதிய திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்க கூடிய ஆட்சி திமுக ஆட்சி என்றும்,  மீனவர்களுக்கு தடை காலத்தில் வழங்கக்கூடிய நிவாரண உதவியை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது இந்த அரசு தான் என்றும்,  நெய்தல் நிலங்களை பாதுகாக்க 2ஆயிரம் கோடி ரூபாய் இந்த ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com