பேனா நினைவு சின்னம் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு...!

பேனா நினைவு சின்னம் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு...!
Published on
Updated on
1 min read

பேனா நினைவு சின்னம் வழக்கு தொடர்பான விசாரணையை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பேனா நினைவு சின்னம் எதிர்க்கட்சிகள் தரப்பில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில் பேனா நினைவு சின்னத்திற்கு தடை விதிக்க கோரி ராம்குமார் என்பவர் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல், மீன்வளத்துறை உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட துறைகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் செவ்வாய்க்கிழமை நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சி, பொதுப்பணித்துறை சார்பாக மட்டுமே பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய மாநில அரசுகள் உள்ளிட்ட பிற துறைகள் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கின் விசாரணையை மே23-ம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com