தமிழ்நாட்டில் விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அபராதமா?  வீட்டு வசதித்துறை அமைச்சர் எழுதிய கடிதத்தில் அதிர்ச்சி தகவல்... 

தமிழ்நாட்டில் விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அபராதமா?  வீட்டு வசதித்துறை அமைச்சர் எழுதிய கடிதத்தில் அதிர்ச்சி தகவல்... 
Published on
Updated on
1 min read

வரன்முறை அற்ற கட்டடங்கள்:

தமிழ்நாடு முழுவதும் பல கட்டிடங்கள் வரன்முறை இல்லாமல் கட்டப்பட்டுள்ளன எனவும் பொதுமக்களுக்கு வரன்முறை திட்டத்தின் முக்கியத்துவத்தை பெரிய அளவில் கொண்டு போய் சேர்க்க வேண்டி உள்ளது எனவும் கூறியுள்ளார் வீட்டு வசதித்துறை அமைச்சரான முத்துசாமி.

அபராத தொகை:

கட்டட அனுமதி இல்லாமல் பல கட்டிடங்கள் மிக நீண்ட நாட்களாக உள்ளதால் அதற்கு தற்போது உள்ள விதிகளின்படி தீர்வை ஏற்படுத்திவிட முடியாது எனவும் பிரச்சனைகள் பற்றி பொதுமக்கள் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளும் வகையில் மிகக் குறைவாக அபராத தொகையை நிர்ணயிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கையாக..:

இனிமேல் மாநிலம் முழுவதும் வரைபட அனுமதி இல்லாத கட்டிடங்கள் எதுவும் வராமல் எச்சரிக்கையாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்திற்கு அரசு மூலமாக மனு செய்து மறுவரையறை செய்வதற்கு ஒரே ஒரு வாய்ப்பை பெற்று விட்டால் முழு தீர்வையும் கண்டுவிட முடியும் எனவும் கூறியுள்ளார் அமைச்சர் முத்துசாமி.

ஆய்வுக் குழு:

நீதிமன்றத்திற்கு தெளிவான கருத்துரையை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யும் வகையில் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து அந்த குழுவின் பரிந்துரையை பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com