முதன் முறையாக ஈரோட்டில் 'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில் மக்கள் உற்சாகம்...!

முதன் முறையாக ஈரோட்டில் 'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில் மக்கள் உற்சாகம்...!

ஈரோட்டில் முதன் முறையாக நடைபெற்ற  'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில் வெகு உற்சாகத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். 


சென்னை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற தலைப்பில் பல்சுவை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு ஆடிபாடி தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். 

இதையும் படிக்க : ”ஓபிஎஸ் அதிமுகவை அழிக்க நினைக்கும் துரோகி” - சி. வி.சண்முகம் விமர்சனம்!

அந்தவகையில், ஈரோடு மாவட்டம் பெரியார்நகரில் உள்ள 80 அடி சாலையில்,  'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உட்பட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, உற்சாகத்துடன் ஆடி பாடி மகிழ்ந்தனர். 

சென்னையிலும் கோவையிலும் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி, தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் நடைபெற தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.