விநாயகர் சதுர்த்தியையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேட்டில் குவிந்த மக்கள்...
விநாயகர் சதுர்த்தியையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லவதற்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லபதற்காக பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக நேற்று மாலை முதலே சென்னை கோயம்பேடு பேருந்து நிலையதிற்கு படையெடுக்க தொடங்கினர்.
மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டதால் அரசு போக்குவரத்து கழகம் மூலம் சென்னை மாநகர பேருந்துகள் வரவழைக்கப்பட்டு வெளிமாவடங்களுக்கு இயக்கப்பட்டது. இதனால் மக்கள் கூட்டம் ஓரளவுக்கு குறைந்து காணப்பட்டது. பண்டிகை நாட்கள் என்பதால் புதன்கிழமை 450 பேருந்துகளும் வியாக்கிழமை 650 பேருந்துகளும் இயக்கப்பட்டதாகவும் மேலும் 100 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் முன்பதிவில்லாத பேருந்துகள் போதுமான அளவு இயக்கப்படவில்லை எனவும் அரை மணிநேரத்திற்கு ஒரு பேருந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டினர். குறிப்பாக திருவாரூர், மயிலாடுதுறை, மதுரை,சேலம்,திருப்பூர், கோவை போன்ற நகரங்களுக்கு குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்தனர். அதேபோல முகவசம் அணியாமல் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாமல் பேருந்தில் பொதுமக்கள் முன்டியடித்து கொண்டு ஏறினர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.