100 நாள் வேலை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்...!

100 நாள் வேலை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்...!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோம சமுத்திரம் பஞ்சாயத்தில் சோமசுமுத்திரம், சோம சமுத்திரம் காலனி, பென்டை கிராமம், கல்பட்டு கிராமம் ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளடக்கியது சோம சமுத்திரம் பஞ்சாயத்து.

இந்த நான்கு கிராமங்களில் ஒன்றான கல்பட்டு பஞ்சாயத்து கிராம பெண்கள் இன்று 100 நாள் வேலை திட்டத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று பணி செய்யும் இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 100 நாள் வேலையை கொடுத்த கிராமங்களுக்கே தருவதாகவும், தங்களுக்கு வேலை தரவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகவலை அறிந்த சோம சமுத்திரம் பஞ்சாயத்து தலைவர் அந்தோணி உடனடியாக சென்று, இரு தரப்பு கிராம பெண்களை ஒன்றிணைத்து இனிமேல் தொடர்ந்து வேலை அளிப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் ஒப்புதல் அளித்தனர். அதனை தொடர்ந்து கல்பட்டு கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர்.