மக்களுக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும் - வேல்முருகன்

கடந்த 50 ஆண்டுகளாக போராடி ஒரு மக்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றும், தற்போது நிலம் எடுப்பு விவகாரத்தில் மும்பரம் காட்டும் மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளை அனுப்பி மக்களை மிரட்டி அடிபணிய வைக்கிறது

மக்களுக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும்  - வேல்முருகன்

உரிய நீதி கிடைக்கவேண்டும் 

கடலூர் மாவட்டம் என்.எல். சி இரண்டாம் சுரங்க விரி வாக்கத்திற்கு நிலம் எடுக்க மாவட்ட நிர் வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுமக்கள் நிரந்தர வேலை வாய்ப்பு கேட்டு பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர், இந்த நிலையில் கடலூரில் ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்க கூடிய மாவட்ட நிர் வாகிகளுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க : ஆளுநரை திரும்ப பெறுவதில் தொடர்ந்து முயற்சிக்கும் திமுக

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த த. வா.க நிறுவனர் வேல்முருகன் கூறுகையில் என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கும், கொடுக்க உள்ளவர்களுக்கும் நிரந்தர வேலை கேட்டு கடந்த 50 ஆண்டுகளாக போராடி ஒரு மக்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றும், தற்போது நிலம் எடுப்பு விவகாரத்தில் மும்பரம் காட்டும் மாவட்ட நிர் வாகம் அதிகாரிகளை அனுப்பி மக்களை மிரட்டி அடிபணிய வைக்கிறது என்றும் அங்குள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி மாவட்ட ஆட்சியர் வரு வாய்த்துறை மற்றும் காவல் துறையினர் செயல்படுவதாக வேல்முருகன் குற்றம் சாட்டினார்.

 

ஆர்.&ஆர் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், நிலம் எடுப்பு சம்பந்தமான நடவடிக்கைகளை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும், நிலம் எடுப்பு விலை நிர்ணயம் வேலை வாய்ப்பு, மாற்றக் குடியிருப்புக்கான தெளி வான வழிகாட்டுதல் அரசாணை வழங்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற டிசம்பர் 26ஆம் தேதி கோரிக்கைக்கு என்எல்சி நிர் வாகம் செவி சாய்க்கும் வகையில் மாபெரும் பேரணியை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்க கூடிய கூட்டணி கட்சி தலைவர்களோடு சேர்ந்து மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் தமிழக முதல்வர் என்எல்சி விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.