தமிழ்நாடு
திமுக அரசு மீது மக்களின் அதிருப்தி கடுமையாக உள்ளது - வானதி ஸ்ரீனிவாசன்!
திமுக அரசு மீது மக்களின் அதிருப்தி கடுமையாக உள்ளதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை, நேதாஜி சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவந்ததால், மோடி ஆட்சியில் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், பிரதமர் ஆட்சியில் அதிகளவு பயன்பெற்றவர்கள் பெண்கள் தான் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களுக்கு திமுக அரசின் மீது கடுமையாக அதிருப்தி இருப்பதாகவும், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்களில் தமிழ்நாடு அரசு தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
.png)

