பெரியார் குடும்ப வாரிசு திருமகன் ஈவெரா மறைவு - வைகோ அதிர்ச்சி

வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் பிரபல கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

பெரியார் குடும்ப வாரிசு திருமகன் ஈவெரா மறைவு - வைகோ அதிர்ச்சி

வைகோ இரங்கல் 

சமூகநீதி போராளி தந்தை பெரியார் அவர்களின் கொள்ளு பேரனும், ஈரோடு கிழக்கு பகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பு காரணமாக காலமானார். பல அரசியல் தலைவர்களும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதிமுகவின் பொதுச்செயலாளாளர் வைகோ, திருமகன் ஈவெராவிற்கு தெரிவித்த இரங்கல் செய்தி கீழ்வருமாறு.

அதிர்ச்சியும்; வேதனையும்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், தந்தை பெரியார் அவர்களின் குடும்ப வாரிசுகளில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் மூத்த மகன் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்தவுடன் அளவுகடந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

காங்கிரஸில் சேவை

காங்கிரஸ் கட்சியிலும் தீவிரமாகப் பணியாற்றியதோடு, அக்கட்சியின் தொழில்நுட்பப் பிரிவிலும் செயலாற்றி, காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக தொகுதியில் அரிய சேவைகளைச் செய்து வந்தார். வாழ வேண்டிய 46 வயதிலேயே அவர் இயற்கை எய்தியது அந்தக் குடும்பத்தினரால் மட்டுமல்ல, யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது.

மேலும் படிக்க | மலத்தை அள்ளி வீசியும் தன் சேவையை தொடர்ந்து செய்த இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்..!

துக்கத்தை பகிர்கிறேன்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு, என்னுடைய துயரத்தையும், இரங்கலையும் தெரிவித்தேன். தாங்க முடியாத இந்தத் துக்கத்தை அவரோடும், அவரது குடும்பத்தினரோடும், காங்கிரஸ் கட்சியினரோடும் பகிர்ந்துகொண்டு, என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொக்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
04.01.2023