டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு - ஊழியர் உயிருக்கு ஆபத்து - கடை அடைத்து போராட்டம்

டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு  வீச்சு - ஊழியர் உயிருக்கு ஆபத்து - கடை அடைத்து போராட்டம்

வீசியதில் ஊழியர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதி. மாவட்டம் முழுவதும் கடையை அடைத்து ஊழியர்கள் போராட்டம்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே டாஸ்மாக் கடையில் மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியதில் ஊழியர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பணி பாதுகாப்பு வழங்க கோரி ஊழியர்கள் டாஸ்மாக் கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் படிக்க | வடமாநிலத்தவர் வதந்தியில் பாஜக இரட்டை வேடம் - மா.சு

காரைக்குடியை அடுத்துள்ள பள்ளத்தூரில் 7721 எண் கொண்ட டாஸ்மாக் கடை இயங்கிவரும் நிலையில் இங்கு நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியதில் அங்கு பணியில் இருந்த விற்பனையாளர் அர்ச்சுணன் என்பவர் தீக்காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதே கடையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னரும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் செயல்பட்டுவரும் 131 டாஸ்மாக் கடைகளையும் அடைத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதுடன் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தை சுமார் 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முற்றுகையிட்டு பணி பாதுகாப்பு வழங்க கோரி ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் எஸ்.பி செல்வராஜை சந்தித்தும் மனு அளித்தனர். டாஸ்மாக் கடையை அடைத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் மது பிரியர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.